ரிஸானாவை அனுப்பிய முகவரின் மற்றுமொரு செயலும் இளம் பெண்ணின் துயரம்

இளம் வயது பெண் ஒருவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பப்பட்ட நிலையில், அந்த நாட்டில் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் ஊடாக அவர் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த அவர், கடந்த 2000 ஆம் ஆண்டு பிறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளபோதும், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரின் உண்மையான வயது 17 அல்லது 18 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண், வறுமை நிலையைக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு பெற்றோர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கை வெளிநாட்டுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரினால், குறித்த பெண்ணும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, மத்திய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

அப்துல் மொஹமட் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அவர்;, 10 வயது அளவில் முதலில் சவுதி அரேபியாவிலும், பின்னர் மற்றுமொரு மத்திய கிழக்கு நாட்டிலும் பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றியபோது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அவர் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு விடுதியில் தங்கியிருந்து ஓமானுக்கு விமான சேவையின் டபிள்யு.வை-371 ரக விமான நிலையத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435