ரயிவே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்களாகியுள்ள நிலையில் போராட்டத்தை ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் இன்று (07) தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்த சம்பள ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்தையும் இணக்கப்பாட்டுடன் நிறைவடைந்ததையடுத்து தமது போராட்டத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கடந்த 24ம் திகதி ரயில்வே சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் சங்கம் என்பன வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்

தேர்தல் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு பொது மக்களை அசௌகரியங்களுக்குட்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தநிலையில் பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக இடம்பெற்றதையடுத்து ரயிவே தொழிற்சங்கங்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435