ரயில் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றியம் எச்சரித்துள்ளன.

புகையிரத திணைக்களத்தில் உள்ள 6000 வெற்றிடங்களை நிரப்புவதுடன் தற்காலிக ஊழியர்களை சேவையில் இணைத்து திணைக்களத்தினூடாக செயற்றிறன் மிக்க சேவையை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் எஸ். பி. வித்தானகே, நாளொன்றுக்கு 384 ரயில் போக்குவரத்துக்கள் காணப்பட்டபோதிலும் தினமும் 20, 30 போக்குவரத்துக்கள் அறிவிப்பின்றி ரத்துச் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று சேவையில் 20222 சேவையில் உள்ளனர். 3055 முகாமைத்துவ கைத்தொழிலாளர்கள், முகாமைத்துவ உதவி தொழில்நுட்ப உதவியாளர்கள் வெற்றிடங்கள் தற்போது காணப்படுகின்றன. தொழிலாளர் தரத்தில் 3000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புகையிரத நிலைய பொறுப்பாளர் பதவிகள் 200 உள்ளன. பிரதான ரயில் நிலைய பொறுப்பாளர்கள் பதவிகள் 60 காணப்படுவதுடன் மேலும் பல வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எஸ்.பி. வித்தானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435