ரயில்வே ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டம் தற்காலிகமாக கைவிடல்

ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பித்த சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்ககொட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரயில் சேவைகளை வழமைபோல முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435