யாழ். போதனா மருத்துவமனை தாதியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவமனையின் அன்றாட மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

யாழ். போதனா மருத்துவமனையில் உள்ள தாதியர்கள் தொடர்பில் அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தே அவர்கள் இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து யாழ்ப்பாண ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

இரண்டு ஆண் மற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தின்போது தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில், யாழ்ப்பாண ஊடகங்களில் அனைத்து தாதிய உத்தியோகத்தர்களையும் அவதூறுக்கு உள்ளாக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435