யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் முற்பகல் 10.30க்கு கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களின் பிரகாரம் பின்வரும் விடயங்களினை முன்னிறுத்தி நாம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முன்னறிவித்தலை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

1. கைவிரல்ஃ கண்ரேகை பதிவு இயந்திரத்தின் மூலம் வருகை மற்றும் மீள் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் உள்வாங்கப்பட்ட பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதையும்இ ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பதையும்இ ஊழியர்களின் வரவுப் பதிவேட்டை 01.04.2019 முதல் நீக்குவதையும்இ ஊழியர்களை பல்வேறு வகையில் இது தொடர்பாக மிரட்டுவதையும் குறித்த ஒரு பகுதியில் இவ்விடயம் தொடர்பாக நிரந்தர ஊழியர்களின் பணிகளினை மேற்கொள்ள தனியே பயிலுநர்களை நியமித்ததுடன் குறித்த பகுதித் துறைத்தலைவர் ஊழியர்களுடன் பணியிடம் சாராத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளுதலும் போன்றன.

2. முறைப்படியான விசாரணைகளின்றி – குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியரிடம் முறையாக விசாரணை செய்யாமல்ஃ ஒழுக்காற்று விசாரணையின்றி முறையற்ற முதற்கட்ட விசாரணையை மட்டும் மேற்கொண்டு ஊழியர்களின் சேமலாபநிதி, பணிக்கொடை என்பவற்றைத் தடுத்துவைத்தல்ஃகுறைத்தல், பணிஉயர்வுகளைத் தடுத்தல்ஃ தாமதப்படுத்தல், மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு, விடுப்பு போன்றவற்றைத் தடுத்தல் மற்றும் தண்டம் அறவிடல் எனப்பலவாறாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபங்கள் மற்றும் தாபனவிதிக் கோவை விதிமுறைகளை மீறி நடைமுறைப்படுத்தல்.

3. சம்பளக் கணிப்பீட்டில் இடம்பெற்ற தவறுகள் பல எமது கடுமையான முயற்சியின் பலனாக திருத்தப்பட்ட போதிலும், மீண்டும சுற்றுநிருபங்களை மீறி; முன்னரையொத்த கணிப்பீட்டு தவறுகள் மேற்கொள்ளப்படுதல்

4. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழியர் காப்புறுதித்திட்டமானது, பல்கலைக்கழக சுய நிதியீட்டத்தின் முழுமையான அல்லது மிகக் கணிசமான பங்களிப்புடன் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட எமது பல்கலைக்கழகம் மட்டும் இதுகுறித்து எம்முடிவினையும் எடுக்காமை.

தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் நாளைய தினம் பல்கலைக்கழக ஊழியரகள், முற்பகல் 10.30 முதல் மதியம் 12.00 மணி வரை கடமையிலிருந்து விலகி தங்கள் நிலைப்பாட்டை பல்கலைக்கழக சமூகத்தினருக்கு கவனயீர்ப்பு மூலம் தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435