மேலதிக கொடுப்பனவை பெறாத ஆசிரியர்களுக்கு அறிவித்தல்

பயிலுனர் ஆசிரியர்களாக 1988-1989 காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்கள் உடனடியாக கல்வியமைச்சை தொடர்புகொண்டு அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு கல்வியமைச்சின் பிரதான கணக்காளர் அறிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் பட்டதாரியல்லாதோருக்கு 100 ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்ட அத்தொகை சம்பந்தப்பட்டவர்களின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு வந்தது.

குறித்த ஆசிரியர்களுக்கு நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்ட பின்னர் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. சிலர் அத்தொகையை மீளப்பெறாமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தொகையை இன்னும் மீளப் பெறாதவர்கள் உடனடியாக வலய கல்வி அலுவலகங்களினூடாக கல்வியமைச்சிற்கு அறியத்தந்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு பிரதான கணக்காளர் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435