முதலாளி தொழிலாளி புரிதலுக்கு வித்திடும் சட்ட அறிவு!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற காரணியாக இருப்பது முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்படுகின்ற அன்னியோன்ய புரிந்துணர்வு மீது அடிப்படையாகக் கொண்ட சுமுகமான உறவாகும்.

இந்த சுமுக உறவுக்கு தீங்கு ஏற்படாமல் தொடர்ந்தும் நல்லுறவு நிலவி வரவேண்டுமாயின் முதலாளி- தொழிலாளி ஆகிய இரு தரப்பினராலும் தொழில் சட்டங்கள் பற்றிய அடிப்படை அறிவினைப் பெற்றிருக்க வேண்டும்.

வரலாற்றினை நாம் புரட்டிப்பார்த்தால் மனித நாகரிகத்தின் ஆரம்பத்தில் வேலையைச் செய்து கொள்வதற்கு உபயோகமான முக்கிய காரணியாக இருந்தது அடிமைத்தன முறையாகும். அடிமையின் வாழ்க்கை உட்பட ஏனைய சகல விடயங்கள் தொடர்பாக எல்லையற்ற அதிகாரத்தை எசமான் கொண்டிருந்தான். அடிமைத்தன முறையின் கீழ் அடிமையின் உரிமைகளை பற்றி பேசுதல் அன்று பகிடியாக இருந்ததுடன், இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக போராட்டமும் நிகழ்ந்தது. ஆனால் போராட்டத்தின் முடிவாக அடிமை அடங்கிப் போதல் அல்லது மரணித்துப் போதல் என்ற நிலையிலேயே இருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியுடன் உற்பத்தி செயற்பாடுகளில் மிகப் பெரிய அபிவிருத்தி ஏற்பட்டது. அதுவரையில் குடிசைக் கைத்தொழில் மற்றும் சிறியளவிலான தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டு உற்பத்தி செயற்பாடுகள் பெரியளவிலான தொழிற்சாலைகளாக மாற்றம் பெற்றன.

இந்தச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டது “தொழிலாளர் வகுப்பு” என்ற புதிய நிலைப்பாடு தோன்றிது. இதன் நன்மை என்னவென்றால் உழைப்பை எசமானுக்கு வழங்குவதன் மூலம் கூலியைப் பெறலாம் என்ற சமூக நிலைப்பாடாகும்.

இதன் பிரகாரம் தொழிலாளி என்பவன் அடிமை மற்றும் பரம்பரையாக வந்த அடிமையான நிலையில் இருந்து வேறுபட்டு ஓரளவு வளர்ச்சியடைந்த நபராக விளங்கினான்.

அதன் பின்னர் பணக்கார வகுப்பில் தோன்றிய தொழிற்சாலை உரிமையாளர்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது யாதெனில்; குறைந்த செலவில் அதிக இலாபத்தை பெறுவதாகும். இந்தக் காரணத்தால் தொழிலாளர் வகுப்பு பாரதூரமான கஷ்டங்களுக்கு ஆளானது. புதிதாக தோன்றிய இந்த பணமற்ற வகுப்பினர் தம் சொந்த உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகப் போராடினர். இந்தப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களின் நலன்புரிதலின் பொருட்டு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு தேவை ஏற்பட்டதுடன் தொழில் சட்டத் துறைக்கு அத்தியாயம் இடப்பட்டது எனலாம்;.

தொழிலாளி என்பவன் யார்?

நெற்றி வியர்வை நிலத்திலே சிந்தி கடுமையான வெயிலினில் வேலை செய்யும் ஒருவரையும், குளிரில் நடுங்கிக் கொண்டு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளி இவர்களை தொழிலாளி வர்க்கத்தில் உள்ளடக்கலாம். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். ஆனால் இலங்கையிலுள்ள தொழிலாளர் சட்டத்தின்படி தொழிலாளி என்பதற்கு தனிப்பட்ட நிறுவனமொன்றில் சுத்திகரிப்புத் தொழிலாளியிலிருந்து பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் வரையிலான எந்த ஒரு நபரையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

தொழிற் சங்கம் என்றால் என்ன?

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1919ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1948ல் இவ் அமைப்பில் இலங்கை உறுப்புரிமை பெற்றது.

இலங்கையின் தொழிற் கட்டளைச் சட்டத்தின் 20ம் பிரிவின் பிரகாரம் பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட ஊழியர்களுடைய அல்லது எசமானர்களுடைய எந்தவொரு சங்கமும் தொழிற் சங்கமாகும்.

1999ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 56ம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் வேலையாட்கள் தொழில் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் தொழில் வழங்குனர் குற்றாவாளியாகின்றார். இதுபற்றி அடிப்படை உரிமைச் சட்டமும் பாதுகாப்பளிக்கிறது.

1945ம் ஆண்டின் 19ம் இலக்க கடைää அலுவலக ஊழியர் சட்டம்

• சட்டத்தின் நோக்கம்

கடை, அலுவலக சேவையில் உள்ள ஊழியர்களுக்கு சேவை வசதிகளை ஏற்படுத்தல், சேவை நேரத்தை நிருணயித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு, மகப்பேற்றுச் சிகிச்சை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்தல்.

ஊழியர் சேமலாப நிதி (EPF)

அரசாங்கத்தில் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஓய்வூதியச் சம்பள நிதியத்திற்கு உரித்துகள் பெறாத ஒவ்வொரு ஊழியரும் இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுவர். அதன் பிரகாரம் 14 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண், பெண் ஊழியர்களுக்கும் இந்தச் சட்டதின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு உரித்துக்கள் பெறுகின்றனர். விசேடமாக தற்காலிக, அமைய, நன்னடத்தை, ஒப்பந்தம் போன்ற எந்தவொரு சேவை நிலமையிலும் கீழே சேவை புரியம் ஊழியரும் கூட சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்வதற்கு உரித்துடையவராக இரு;கிறாhகள்;.

• தொழில் தருநரிடமிருந்து 12 வீதமும்

• வேலையாளிடமிருந்து 8 வீதமும் கழிக்கப்படும்.

• ஆண்கள் 55 வயதிலும்

• பெண்கள் 50 வயதிலும் மீளப் பெறலாம்

ஊழியர் நம்பிக்கை நிதியம் ( ETF)

ஓய்வூதிய நிதியத்திற்கு உரிமைகோரும் அரசாங்க மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் சேவையாற்றும் ஊழியர்களைத் தவிர ஏனைய சகல ஊழியர்களும் இந்நிதியத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றனர்.

· தொழில் தருனர் வேலையாளின் மொத்த சம்பாதியத்தின் 3 வீதம் செலுத்துதல் வேண்டும்.

· இந்நிதியை 5 வருடத்திற்கு ஒரு தடவை மீளப் பெறலாம்.

· இந்நிதியத்தின் அங்கத்தவராயுள்ளவர் இலவச காப்புறுதிக்கும் நலன்களுக்கும் உரித்துடையவர்

ஊழியர் சேமலாப நிதியை சில விசேட காரணங்களுக்காக மீளப் பெறலாம்

• ஆண் 55, பெண் 50 வயது இதற்கு முன் ஒருவர் இலங்கையை விட்டு நிரந்தரமாக வெளிநாட்டிற்கு குடியேறும் பொழுது பெறலாம்.

• ஓருவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வைத்திய அத்தாட்சியின்படி உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் தொழில் செய்ய முடியாது என்ற நிலையில் பெறலாம்

• ஒருவர் அரச ஊழியராக பென்சன் திட்டத்தில் சேரும் போது பெறலாம்.

பணிக்கொடை (Gratuity)

நிறுவனம் ஒன்றில் 15 பேர் கொண்ட ஊழியர்கள் அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையுடனான தொழிலாளர்களை சேவையில் அமர்த்தியுள்ள 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான சேவையைக் கொண்டிருக்கும் ஊழியர்கள் பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் உள்ளடங்கப்படுவார்கள். பணிக்கொடை ஒரு வருட சேவைக்கு இறுதியாகப் பெற்ற மாதச் சம்பளத்தின் அரைப்பகுதி என்ற வகையில் கணிக்கப்படும்.

வேலையாட்கள் சேவை முடிவுறுத்தல்

இச்சட்டத்தின்படி 15 அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்களை கொண்டிருத்தல்

வேலையாளை ஒழுக்காற்ற காரணங்கல்லாத ஆட்குறைப்பு, நிறுவனத்தை மூடுதல் போன்ற காரணங்களுக்காக அவ்வேலையாளின் எழுத்துமூல சம்மதம் அல்லது ஆணையாளரின் எழுத்துமூல ஆணையின்றி சேவை முடிவுறுத்த முடியாது.

நன்றி- இணையம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435