முதலாளிமார் சம்மேளத்துடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அடுத்தவாரம் பேச்சுவார்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று இ.தொ. காங்கிரஸின் தலைவர் முத்து. சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கூட்டு ஒப்பந்தத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்த்துவைக்கும் என்று சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் முத்து. சிவலிங்கம், 2500 ரூபா சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்த நிலையிலேயே பேச்சுவார்த்தையை தாமதமாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதேவேளை. தோட்டத் தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்த 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறது. இந்த மாதம் அக்கொடுப்பனவு கிடைக்கும். ஆனால் அது நிரந்தரமானது அல்ல. கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களைச் சார்ந்தது.

ஒப்பந்தம் காலாவதியான நிலையில் மீண்டும் கைச்சாத்திடாது தொழிற்சங்கங்கள் உதாசீனமாக நடந்துகொள்வதையே தற்போது காணக்கூடியதாக இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்து சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுகொடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. velaiththalam says:

    தோட்டதோழிலாளர்களுக்கான "சம்பள உயர்வு" பேச்சுவார்த்தை இழுபறியாக இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.பொறுப்புள்ளவர்கள் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, சம்பளத்தை தீர்மானித்து தொழிலார்களின் எதிர்பார்ப்புக்கு/ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். .

    (0)(0)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435