மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

தேர்தலுக்கு முன்னர் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுவரை தொழில் கிடைக்காத அனைத்து உள்வாரி, வௌிவாரி மற்றும் உயர் தொழில்நுட்பக்கல்லூரி பட்டதாரிகளை பேதங்களை கலைந்து இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அழைத்துள்ளது.

இப்போராட்டத்தின்போது ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435