மாவட்ட செயலகங்களுக்கு முன்னாள் போராடும் பட்டதாரிகள்

தனியார்துறையில் பணியாற்றுகின்றமையினால் பயிலுநர் பட்டதாரிகள் நியமனத்தில் இணைத்துக்கொள்ளாத அனைத்து பட்டதாரிகளையும் சேவையில் இணைத்துகொள்ளுமாறு ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (16) ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விரைவில் அனைவரையும் பயிற்சியில் இணைத்துகொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் அழைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பின்னர் தனியார்துறையில் பணியாற்றி வந்த சுமார் பத்தாயிரம் பட்டதாரிகள் பயிலுநர் பட்டதாரிகள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை. இச்சிக்கலுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகள் தமது சங்கம் கோரியதாகவும் அவர்கள் தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்கள் என்றும் தெரிவித்த தேரர், தீர்வுக்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படாத நிலையில் தாம் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435