மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் புதிய நடைமுறை

ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையை மீள ஆரம்பிப்பது குறித்து விளக்கங்களை இந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து, கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கினார்.

இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விசேட முறைமைகள் கையாளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

எனினும் 200 க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையை கொண்ட ஆரம்ப பாடசாலைகள் காணப்படுகின்றன.

அங்குள்ள மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கு விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய 200 க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவில் திங்கட்கிழமைகளில் முதலாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் சமூகமளிக்க முடியும்.

புதன்கிழமைகளில் மூன்றாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 4, 5 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும்.

இதற்கமைய தரம் ஒன்று, இரண்டு, மூன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.

முன்னர் காணப்பட்ட கால எல்லையின் அடிப்படையிலேயே இந்த சந்தர்ப்பங்களிலும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று 200 க்கும் அதிக எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமை பின்பற்றப்படவுள்ளது.

இதற்கமைய திங்கட்கிழமைகளில் 6,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

செவ்வாய்கிழமைகளில் 7,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

புதன்கிழமைகளில் 8,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலை சமூகமளிக்க முடியும்.

வியாழன் மற்றும் வெள்ளிககிழமைகளில் 9 முதல் 13 வரையான தரங்களில் கல்வி மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435