மலேசிய கடவுச் சீட்டுடன் பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் கைது

மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸூக்கு செல்ல முயற்சித்த இலங்கைத் தமிழர் ஒருவர் தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

பிரபு தர்மலிங்கம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த இலங்கையர் சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டாரென தாய்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் தாய்லாந்தின் தென்பகுதியின் ஊடாக செப்டம்பர் 13ஆம் திகதி அந்த நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உள்ளானவர் அல்ல என்று விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாய்லாந்தில் இந்த வருடத்தில் மாத்திரம் போலியான கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர்கள் உட்பட்ட 45பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435