மத்திய கிழக்கிலுள்ள இலங்கையருக்கான வசதிகளை வழங்குக!

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அவசியமான சலுகைகைள் வழங்குமாறு அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழற்சங்கங்கள் அரசிடம் கோரியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அவசியமான தனிமைப்படுத்தல் முகாம் வசதிகள், நோய்வாய்ப்பட்டால் அவசியமான சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உள்ள பில்லியன் கணக்கான நலன்புரி நிதியைக் கொண்டு பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 20 அரச பிரிவு தொழிற்சங்கங்கள் இணைந்து இக்கோரிக்கையை விடுத்துள்ளதுடன் குறிப்பாக குவைத்தில் நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்று அத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அப்புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாதுள்ளது என்று அவர்களை நாட்டுக்கு அழைத்து வராதிருத்தல் மற்றும் மௌனம் சாதித்தல் மிக வெறுப்புடன் கண்டிக்கிறோம்.

குவைத்தில் மட்டும் சுமார் 19000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர். கொரோனா பரவி வரும் நிலையில் மிக குறைந்த வசதிகளுடன் பாரிய பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். வீஸா முடிவடைந்த நிலையில் சட்டரீதியற்ற முறையில் அந்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு தற்போது பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில் அக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருவதாக அத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435