மது, புகைத்தலை தடுக்க சவுதியில் விசேட நடவடிக்கை

பள்ளிவாயில்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார, விளையாட்டு மற்றும் கலாசார நிலையங்கள், பொதுப்போக்குவரத்து நிலையங்கள் முன்பாக மதுபானம் மற்றும் புகைத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்கள் 200- 5000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கையை குறைக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் அமுலுக்குகொண்டு வரப்பட்டுள்ளது.

அத்தோடு 18 வயதுக்கு குறைந்த வயதுடையவர்களுக்கு போதை பொருட்கள், மது, மற்றும் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றின் பாவனையை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுமாறே அந்நாட்டு அரச கோரியுள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகளினால் பெறப்படும் அபராதத் தொகையும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும்.

அத்தோடு, புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான வகைகளுக்கு விலை குறைப்பு, சலுகைகள் வழங்கி அவற்றின் பாவனையை அதிகப்படுத்துவதற்கு தூண்டுவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே புலம்பெயர் தொழிலாளர்கள் இது தொடர்பில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435