போலி கடவுச்சீட்டுடன் சென்றால் 25,000 கட்டார் ரியால் அபராதம்!

நேற்று (13) நடைமுறைக்கு வந்த புதிய சட்டம் பற்றி தெரியாமல் தடுமாறும் புலம் பெயர் தொழிலாளர் நன்மை கருதி இச்செய்தி வழங்கப்படுகிறது.

கட்டார் புதிய சட்டத்தின் படி நாட்டை விட்டு வௌியேறுவதற்கான அனுமதி பத்திரம் தேவையில்லையென்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இதற்கு முன்பிருந்த சட்ட இல 21 இல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வௌியேறுவதற்கு குறைந்தது 3 நாட்களுக்கு முன்னர் தெரியப்படுத்தினால் போதுமானது.

புதிய ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட அவசியமில்லை என்பது உட்பட சில முக்கிய விடயங்கள் நேற்று (13) செய்தியில் வழங்கப்பட்டிருந்தது. மேலதிக விபரங்கள் வருமாறு

.

புலம்பெயர் பணியாளர் ஒருவர் தனது தொழில் வழங்குனரினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தார் என்பதை உறுதிப்படுத்தி சேவைக் காலம் நிறைவுறுவதற்கு முன்பாகவே வேறு தொழில் வழங்குனரிடம் இணையலாம்.

தாய் நாட்டுக்கு திரும்புவதற்கு முன்னர் தான் தெரிவு செய்து வைத்துள்ள தொழில் ஒப்பந்தத்தின் பிரதியை பார்க்கலாம். அதனூடாக தொழில் அனுமதியை பெறுவதற்கு நிர்வாக அபிவிருத்தி, தொழில் விவகார அமைச்சின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஏற்கனவே கட்டாரில் பணி ஒப்பந்தம் மற்றும் பதிவை ரத்து செய்தவர்கள் மீண்டும் அனுமதியை பெறுவதற்கு புதிய வீஸாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த சட்டம் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் நாட்டுக்குள் வர தடை செய்யப்பட்டவர்களுக்கு பொறுத்தமற்றது என்பதை கவனத்தில் கொள்க.

போலி கடவுச்சீட்டுடன் அகப்படுபவர்கள் 25,000 கட்டார் ரியால தண்டப்பணமாக செலுத்த வேண்டும்.

ஒப்பந்தக் காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து தாய் நாட்டுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீண்டும் உடனடியாக கட்டார் திரும்பி பணியில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு.
சேவைக் காலம் பூர்த்தியடைந்தும் புதிய தொழிலை பெற முடியாமல் போன வௌிநாட்டுப் பணியாளர்கள் தமது பதிவு காலாவதியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நாட்டை விட்டு வௌியேற வேண்டும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435