போலாந்தில் 3000 தொழில் வாய்ப்புகள் விரைவில்

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை ஊக்குவிப்பதற்காக விரைவில் போலந்து நாட்டு அரசாங்கத்திடமிருந்து 3000 தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு யோசனை முன்வைத்துள்ளது.

விளையாட்டுத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோவுக்கும், இலங்கைக்கான போலந்து தூதுவருக்கும் இடையில் அண்மையில் அமைச்சின் காரியாலத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது தொழில்வாய்ப்பு பிரச்சினைகள் மற்றும் இரு தரப்புக்கும் இடையிலான நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், தொழில்வாய்ப்புக்களை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435