போராட்டத்தை ஆரம்பிக்குமா பல்கலைகழக விரிவுரையாளர் சங்கம்?

தமது சம்பள பிரச்சினைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அமைப்பு அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

அனைத்து அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2015 ஆண்டை விடவும் நூற்றுக்கு 107 சதவீதம் அதிகரிப்பதாக 2016ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கம் உறுதியளித்தது. எனினும் அதனை செயற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. ஏனைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம் 92 வீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. எமக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம் என நேற்றுமுன்தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெர்ணாண்டோ கருத்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சம்பள ஆணைக்குழு மற்றும் திரைசேரி என்பவற்றுடன் இவை தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். கலந்துரையாடலின் பலனாக மூன்று நாட்களின் பின்னர் அமைச்சிலுள்ள தலைகணம் மிக்க அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தினால் 107 சதவீதத்தில் இருந்த பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிரதி பேராசிரியர்கள் ஆகியோரின் சம்பளத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே எமது அங்கத்துவச்சபை அங்கத்துவர்கள் 40 பேரும் ஒரே மனதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என தீர்மானித்தோம். அதற்கு முன்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வியமைச்சர் ரவுப் ஹக்கீம், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை இவ்விடயம் தொடர்பில் கடிதம் மூலம் தௌிவுபடுத்த நாம் தீர்மானித்தோம்.

எம்முடன் கலந்துரையாடுவதற்கும் சாதகமான பதிலை வழங்குவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு செப்டெம்பர் 4ம் திகதி வரை காலம் வழங்கியுள்ளோம். எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள். அவ்வாறில்லாவிடின் எவ்வித அறிவிப்புமின்றி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பேராசிரியர் ரொஷான் பெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.

நன்றி- அத தெரண

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435