போக்குவரத்து விதி மீறல் அபராதங்களுக்கு 50 வீத கழிவு

போக்குவரத்து விதி மீறல் குற்றச்சாட்டுக்குட்பட்ட சாரதியொருவர் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 6 மாதங்களுக்கு விதிமீறல் குற்றஞ்சாட்டப்படாதிருப்பின் அபராதத்தொகை 50 வீதத்தால் குறைக்கப்படும் என்று அஜ்மான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழும் மக்களின் சந்தோஷத்தை கருத்திற்கொண்டு இவ்வாண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்புதிய சலுகை வழங்கப்படுவதாக அஜ்மான் பொலிஸ் உயர் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஷீக் சுல்தான் பின் அப்துல்லாஹ் அல் நயோய்மி தெரிவித்தார்.

இத்திட்டமானது எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய, மோட்டார் வாகன சாரதிகள் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூன் முதலாம் திகதி விதிமீறல் குற்றச்சாட்டுக்குட்படாதவர்களாக இருக்க வேண்டும். இச்சலுகையானது இவ்வருட இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

இத்தகவல் அஜமான் பொலிஸ் உத்தியோகப்பூர்வ செயலியில் குறித்த விடயம் வௌியிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435