பொலிஸ் பாதுகாப்புடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம்

நோர்வூட் – டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதனம் நேற்றிரவு பொலிஸ் பாதுகாப்புடன் வழங்கப்பட்டது.

சாஞ்சிமலை தோட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீரினை தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த தோட்டத்தின் உதவி முகாமையாளர், தொழிலாளர்களுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் முரண்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக, தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் சாஞ்சிமலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட உதவி முகாமையாளர் மாதாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை மேற்கொண்டபோது அதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை தொழிலாளர்கள், தோட்ட காரியாலயத்திற்கு முன்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டுடன், தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435