பொதுவிடங்களில் புகைப்படம் எடுக்காதீர்…

விபத்துக்களை படம்பிடிப்பதும் காணொளிகள் எடுப்பதும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கமராவை கொண்டு அழகிய காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதவிடுங்கள் ஆனால் அப்புகைப்படங்களில் அறிமுகமல்லாத நபரின் உருவம் அவர் விருப்பமின்றி வௌியிடுவீர்களானால் அதற்கும் தண்டனை அனுபவிக்க தயாராக இருங்கள் என்கிறது அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பு.

விபத்துக்கள், நிகழ்வுகள் மற்றும் திருமணங்களின் போது பலரும் கமராக்களை கொண்டு காணொளிகளை புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். ஆனால் அவற்றில் உள்ள பெரும்பாலானவர்கள் அது குறித்த அறிவதில்லை. எனவே நாம் இவ்விடயம் குறித்து நாம் மிகவும் கவனமாக உள்ளோம்.

சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்யும் இளம் வயதினருக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு தருணங்களில் அனுமதியின்றி பலர் புகைப்படங்களும் காணொளிகளும் எடுக்கப்படுவதாக தமக்கு பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435