பொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் அதிகரிப்பு – மத்திய வங்கி

பொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019இல் 4.7 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

முறைசார் தனியார் துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2019இல் 2.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்ட வருகை மற்றும் உற்பத்தித்திறன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மொத்தச் சம்பளத்தில் ரூ.20 மட்டுமே அதிகரிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் 2019 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2019ஆம் ஆண்டில் சிறப்புக் கொடுப்பனவில் நான்காவது கட்டம் மற்றும் டைக்காலக் கொடுப்பனவாக பொதுத்துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ரூ.10,000 சேர்க்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, 2019 யூலை 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பொது நிர்வாகச் சுற்றறிக்கை 09ஃ2019,ன் கீழ் அனைத்து பொதுத் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியமற்ற புதியதொரு மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதன் விளைவாக, பொதுத் துறைக் கூலி வீத சுட்டெண்ணின் ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் அளவிடப்பட்ட பொதுத்துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019,ல் 4.7 சதவீதத்தினால் அதிகரித்தது.

அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட தொடர்ச்சியான உண்மைக் கூலிச் குறைப்பினை மாற்றியமைத்து 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019,ல் பொதுத்துறை ஊழியர்களினுடைய உண்மைக் கூலியானது 1.1 சதவீதத்தினால் அதிகரித்தது.

மேலும், பொதுத் துறை ஊழியர்களினுடைய அடிப்படைச் சம்பளத்தில் விசேட கொடுப்பனவு மற்றும் இடைக்காலக் கொடுப்பனவைச் சேர்த்துக் கொள்வதற்கான தொழிற்பாடானது 2020 சனவரியில் மேற்கொள்ளப்பட்ட இறுதித் திருத்தங்களுடன் நிறைவுசெய்யப்பட்டன.

தனியார் துறைக் கூலிகள்

கூலி நிர்ணய சபையால் நிருவகிக்கப்படும் ஊழியர்களின் குறைந்தபட்சக் கூலி வீதச்சுட்டெண்ணில் (1978 திசெம்பர்®100) ஏற்படும் ஆண்டுச் சராசரி மாற்றத்தின் நியதிகளில் அளவிடப்படுகின்ற முறைசார் தனியார் துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2019இல் 2.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

இது முக்கியமாக, செங்கல் மற்றும் ஓடு உற்பத்தி, தெங்கு உற்பத்தி, உள்ளாடை உற்பத்தி, தீக்குச்சி உற்பத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து வர்த்தகத்தில் 2019 பெப்புருவரியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஆகக்குறைந்த கூலிகளின் அதிகரிப்பினால் உந்தப்பட்டது.

எனினும், முறைசார் தனியார் துறை ஊழியர்களிடையே உண்மைக் கூலிகள் 2018இல் பதிவுசெய்யப்பட்ட 3.5 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2019இல் 1.3 சதவீதத்தினால் மிதமாக வீழ்ச்சியடைந்தது.

பெருந்தோட்டத்துறை

2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச நாளாந்த கூலியாக ரூ.1,000 இனைக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஆரம்பித்ததுடன் அதனைத் தொடர்ந்து அடிப்படை நாளாந்தக் கூலியானது ரூ.500 இலிருந்து ரூ.700 இற்கு அதிகரிக்கப்பட்டது.

எனினும், பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்ட வருகை மற்றும் உற்பத்தித்திறன் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டமை காரணமாக மொத்தச் சம்பளத்தில் ரூ.20 மட்டுமே அது தொடர்பான அதிகரிப்பாக காணப்பட்டது.

முறைசாரா தனியார் துறையில் 2019இல் பெயரளவு மற்றும் உண்மைக் கூலிகளில் வளர்ச்சி காணப்பட்டது. முறைசாரா துறையின் கூலிகளானவை தொழிற்சந்தையில் கேள்வி மற்றும் நிரம்பலால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, முறைசாரா தனியார் துறைக் கூலி விகிதச் சுட்டெண்ணின் (2012®100) ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் அளவிடப்பட்ட முறைசாராத் துறை ஊழியர்களின் பெயரளவு கூலிகள் கடந்த ஆண்டின் 13.2 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2019இல் 6.2 சதவீதத்தினால் சிறிதளவில் அதிகரித்திருந்தது.

வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் ஆகிய அனைத்து மூன்று துணைத் துறைகளின் பெயரளவு கூலிகளானவை கரிசனைக்குரிய காலப்பகுதியில் முறையே 9.0 சதவீதம், 5.4 சதவீதம் மற்றும் 5.7 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்தமாக, முறைசாரா தனியார் துறை ஊழியர்களின் உண்மைக் கூலிகள் 2019,ல் 2.6 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435