பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க என்ன செய்வது?

பேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களில் அதிகம் அவதானிக்கப்படும் குற்றங்களில் ஒன்று அண்டை நாடான இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்திய கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி சில நாட்களுக்கு முன்பு தனது கால்நடை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 27 வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் எரிக்கப்பட்ட உடல் நவம்பர் 26 அன்று ஹைதராபாத்தில் கைவிடப்பட்ட வீதியில் கண்டெடுக்கப்பட்டது. இது ஒரு மிருகத்தனமான, கொடூரமான குற்றமாகும். அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக ஒருபுறம் சட்டம் இயற்றப்பட வேண்டும், மறுபுறம் அத்தகைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்ற சமூக வலுவூட்டல் அவசியமாகும்.

புங்குடுதீவு மாணவி வித்யா, சேயா சந்தெவ்மினி, கஹவத்தையில் தாயும் மகளும் கொல்லப்பட்டமை என வெளிப்படுத்தப்பட்ட – வெளிப்படுத்தப்படாத பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இலங்கையில் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சில குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவை நினைவுபடுத்தப்படுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஓய்வு பெறுகின்ற சந்தர்ப்பத்தில் ரோயல் பார்க் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் விடுதலை செய்தார்

பிரியங்கா ரெட்டியின் வேதனையான நினைவில் எழுப்பும் பலர் , கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்தையோ அல்லது நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதையோ அல்லது குற்றவாளியை ஜனாதிபதி விடுதலை செய்தமைக்கு எதிராக எதிர்ப்பு வெளியிட்டதை காணமுடியவில்லை

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். சமுதாயத்தின் தொடர்ச்சியான அணிதிரட்டல் இல்லாமல் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் இத்தகைய குற்றங்களையும் ஒழிக்க முடியாது. அதற்காக இயன்றளவு கருத்தாடல்களை மேற்கொள்வது எமது பொறுப்பும் கடமையும் ஆகும்

பாலின அடிப்படையிலான வன்முறையின் ஏழு சிக்கல்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. உரையாடலுக்கு பங்களிக்க இந்த ஏழு விடயஙல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

01 இது, உடல் ரீதியான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், உளவியல் வன்முறை மற்றும் பொருளாதார வன்முறை என பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வன்முறைகளுக்கு உட்படுத்தப்படலாம்.

02 ஆண்களும் பெண்களும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்படலாம் என்றாலும், பெரும்பாலும் பெண்கள் தான் இந்த வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

03 இலங்கையில் ஒவ்வொரு மூன்று பெண்களில் ஒருவர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துன்புறுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது பொதுப் போக்குவரத்து வாகனத்திலோ நிகழலாம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தங்கள் துணைவரால் வீட்டிலேயே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

04 இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் திருமணமானவர்கள் / திருமணமாகாதவர்கள், ஏழைகள் / பணக்காரர்கள், இன / மத அல்லாமல் எந்த ஒரு சமூகத்தைச் சார்ந்தவராக இருக்க முடியும்

05 துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் அவமானம் காரணமாகவும் குற்றமிழைத்தவர் மீதான அச்சம் காரணமாகவும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் யாரிடமும் சொல்ல தயங்குகிறார்கள்.

06 இதுபோன்ற வன்முறைகளை ஒரு ரகசியமாக வைத்திருக்காமல் உறவினர், அயலவர்கள், சுகாதார பணியாளர், சமூக சேவகர், மதத் தலைவர், காவல்துறை அல்லது நீதிமன்றத்திற்கு அறிவிப்பதன் மூலம் நிவாரணம் பெற முடியும்.

07 வீட்டு வன்முறைச் செயல்களை அவதானிக்கும் குழந்தைகளுக்கு மனநல பாதிப்புகள், கற்றல் குறைபாடுகள், வன்முறை நடத்தை மற்றும் பிற்காலத்தில் சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற வன்முறை சம்பவத்தின்போது யாருக்கும் உதவி அவசியமாயின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொறுப்பு வாய்ந்த மற்றும் ஒருங்கிணைக்கும் முகவர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மிதுரு பியசா – குடும்ப சுகாதார பணியகம் 011 3 040 541,
குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் 011 2 826 444,
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் 1926,
பெண்கள் உதவி 011 4 718 585,
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு 011 5 335 329

 

பி.டபிள்யூ முத்துக்குடஆராச்சி/ தமிழில் பாரதி
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435