புலம்பெயர் தொழிலாளருக்கான ‘ரண் பியபத்’

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பங்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்வதற்காக ‘ரண் பியபத்’ கருத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருடாந்தம் சுமார் ஒரு மில்லியன் பேர் வௌிநாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று நாட்டுக்கு பாரிய அளவிலான அந்நிய செலாவணியை பெற்றுத் தருகின்றனர். அவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரண் பியபத் தொலைத்தொடர்பு திட்டமானது உள்ளூர் தொடர்பாடல் வலையமைபினூடாக தமது குடும்பங்களுக்கு குறைந்த விலையில் தொடர்புகொள்ள முடியும்.

ரண் பியபத்தினூடாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் அன்புடையோருடன் வீடியோ கோல், வொயிஸ் கோல் மற்றும் குறுந்செய்திகளினூடாக தொடர்பு கொள்ள முடியும். .

குறித்த ரோமிங் பெக்கேஜ் முதல் மாதத்தில் இலவசமாக வழங்கப்படும். 1980 உடனடி இலக்கத்தினூடாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்துடன் இலவசமாக தொடர்புகொள்ள முடியும். இரண்டாம் மாதத்தில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு விசேட நன்மைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் 1000 நிமிட இலவச அழைப்பு, குறுந்தகவல் வசதி, 1000 MB டேட்டா, என்பன இதில் உள்ளடங்குகின்றன.

இரண்டாம் மாதம் தொடக்கம் இலங்கையில் இருந்து ரீ- லோட் செய்துக்கொள்ள முடியும். mCash, www.mobitel.lk மற்றும் மொபிடல் இணைந்து சேவை வழங்கும் Ding, TransferTo, D told, Lanka reload, Matrix, Tranglo, Kapruka மற்றும் Teleseene ஆகியவற்றினூடாகவும் ரீ – லோட் செய்ய முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435