புலம்பெயர்தோரின் சுகாதார பாதுகாப்பு மாநாடு இலங்கையில்

புலம்பெயர்ந்தோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது உலக மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை இலங்கை நடத்துவதற்காக அனுமதி பெறும் பொருட்டு சுகாதார அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை தீர்மானத்திற்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் 40 நாடுகள் பங்குபற்றவுள்ளன. மேலும் புலம்பெயர்ந்தோரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டிய பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கில் இவ்வமர்வை இலங்கையில் நடத்த வேண்டும் என்றும் என்று ஜனாதிபதி முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435