புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு 9 மாத விடுமுறை

புற்றுநோயினால் பாதிக்கப்படும் அரச ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான சம்பளத்துடன் கூடிய 9 மாதத்திற்கு மேற்படாத விசேட விடுமுறை வழங்கும் வகையில் தாபனக்கோவையில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொது நிருவாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொது நிருவாக அமைச்சு இலக்கம் 23/ 2019 சுற்றுநிரூபத்தை வௌியிட்டுள்ளது. இதற்கமைய புற்றுநோய் பாதிப்புக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேற்படாத வகையில், முழுச் சம்பளத்துடன் மருத்துவச் சான்றிதழின் அடிப்படைடையில் விசேட விடுமுறை வழங்கப்படும். மேலதிகமாக லீவு தேவைப்படுவதாக வைத்திய சபையின் பரிந்துரை இருப்பின் மேலும் 3 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.

இதுவரை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. இதேபோல் காசநோய் மற்றும் தொழுநோய் என்பவற்றுக்கும் விசேட விடுமுறைகள் வழங்கப்படும் என்று விடேச விடுமுறை தாபனக்கோவையில் குறிப்படப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435