அரச ஊழியர்களின் கவனத்திற்கு: ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தல்

பொதுமக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் உன்னத தேசம் பற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எதிர்பார்ப்பை ஈடேற செய்வதற்கு அனைத்து அரச ஊழியர்களும் புத்தாண்டில் தமக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றும்போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் முகங்கொடுத்த சவால் நிறைந்த நிகழ்வுகளை நினைவிற்கொண்டு பிறந்திருக்கும் புத்தாண்டின் சவால்களை கூட்டாக வெற்றிகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் மனக்குறைகளை கேட்டறிந்து அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

சிறந்த சேவையின் மூலம் அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு ஒன்றிணையுமாறும் உதய ஆர்.செனவிரத்ன அனைத்து அரச ஊழியர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435