புதிய தொழில் தருநரின் கீழ் பணியாற்ற விரும்புபவர்களுக்கு…

கட்டாரில் பணியாற்றுபவர்கள் புதிய இடத்தில் பணி செய்ய விரும்புவதாயின் கீழ்வரும் சட்ட திட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது பணியாற்றும் தொழில் தருநரின் கீழ் இரு வருடங்கள் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்
முதல் எஜமானரிடமிருந்து ஆட்சேபனையின்மை (No Objection Certificate (NOC)) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
புதிய தொழில் தருநரின் ஆட்சேர்ப்புக்கான அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்
தற்போதைய தொழில் தருநர், புதிய தொழில் தருநர் மற்றும் ஊழியர் இணக்க சான்றிதழில் (sponsorship transfer form) கையெழுத்திட வேண்டும்.
புதிய மற்றும் முன்னைய தொழில் தருநர்களின் கையெழுத்து உறுதிப்படுத்தப்படவேண்டும்

புதிய தொழில் தருநரின் கீழ் பணியாற்றுவதற்கு செல்வதற்கு கீழ்வரும் வகையில் கட்டணம் அறிவிடப்படுகிறது.

முதற் தடவை தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு- நிறுவனங்கள் 2000 கட்டார் ரியால்- தனிநபர் 1000 கட்டார் ரியால்
இரண்டாம் தடவை தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு- நிறுவனங்கள் 2500 கட்டார் ரியால்- தனிநபர் 1500 கட்டார் ரியால்
மூன்றாவது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொழில் செய்யும் இடத்தை மாற்றுவதற்கு நிறுவனங்கள்- 3000 கட்டார் ரியால்- தனிநபர் 2000 கட்டார் ரியால்

மேலதிக தகவல்களை  http://www.qatarday.com/blog/legal/how-to-change-sponsorship-in-qatar/14615#sthash.9dgqufRE.dpuf  என்ற இணைய தள முகவரியில் பிரவேசித்து பெற்றுகொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. velaiththalam says:

    இத்தகைய சட்ட திட்டங்களை புலம்பெயர் தொழிலாளர் அறிந்து செயற்படுவது அவசியம். அல்லது தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும்

    (0)(1)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435