பிரதமருக்கும் முதலாளிமார்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிற்கும், பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

தங்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், இந்த முறை 1000 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனம் பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்துள்ளன.

எனினும் 600 ரூபாவிற்கு மேல் நாளாந்த அடிப்படை வேதனத்தை அதிகரிக்க முடியாது என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தநிலையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தாம் இதுதொடர்பில் நாளையதினம் கலந்துரையாடுவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.

வழிமூலம் சூரியன்செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435