பாலகன் மீது கொதிநீரை ஊற்றிய பணிப்பெண்!

பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்த மறுநாளே எஜமானின் கடைசி மகன் மீது கொதி நீரை ஊற்றிய இந்தோனேசியப் பணிப்பெண்ணை ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் வியாழக்கிழமை (29) பணியாளர்களை வழங்கும் நிறுவனமொன்றினூடாக குறித்த பெண் வீட்டுப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை தனது சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தவாறு சமையலறையில் நுழைந்த 18 மாத குழந்தையின் மீதே இப்பணிப்பெண் கொதி நீரை ஊற்றியுள்ளார்.

இவ்வாறு செய்ய காரணம் என்ன என்று குழந்தையின் தந்தை வினவியபோது தான் வேலை செய்து கலைத்துப் போயிருந்தமையினால் அவ்வாறு செய்தாக தெரிவித்தார் என்று தந்தை தெரிவித்திருந்தார்.

மார்புப்பகுதி, கை, கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலகனின் உயிருக்கு ஆபத்தில்லாவிடினும் எதிர்காலத்தில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்படலாம் என்றும் குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு குறையலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை பணிக்கமர்த்துவதற்காக 14,000 திர்ஹம் முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட்டதென் தெரிவித்த பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை முகவர் நிலையத்திற்கும் பெண்ணுக்கும் எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வீஸா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாகவே குறித்த பெண் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் ஏற்கனவே பணியாற்றிய வீட்டில் மிக மோசமாக நடத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் முகவர் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வேலைத்தளம்/ 7 days

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435