பாதுகாப்பு அச்சுருத்தல்- மடக்கும்புற தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறு கூறி தலவாக்கலை மடக்கும்புற தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தேயிலைத் தோட்டங்களை சரியான முறையில் பராமரிக்க தவறியுள்ளமையினால் மலைகள் காடாகி போயுள்ளதாகவும் இதனால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

காடு வளர்ந்துள்ள தேயிலை மலைகளில் விஷ ஜந்துக்கள் இருப்பதனால் தமக்கு பாதுகாப்பாக வேலை செய்ய முடியவில்லை என்று அச்சம் வௌியிட்டுள்ள இத்தொழிலாளர்கள், காட்டு எருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் தொழில் செய்வது மட்டுமன்றி இரவு நேரங்களில் வௌியில் செல்வதற்கும் அச்சமாயிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435