பாதிக்கப்பட்ட வடக்கு ஊடகவிலாளர்களுக்கு நட்டஈடு!

கடந்தகாலங்களில் பல்வேறுவகையிலும் பாதிக்கப்பட்ட வடக்கு ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு நாளை (11) யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் ஊடக அமைச்சின் திட்டத்தின் கீழ் இந்நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையில் இந்நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதேபோல் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான நேர்முகத்தேர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435