ஜிந்துப்பிட்டி பாடசாலைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

கொழும்பு – 13, ஜிந்துப்பிட்டியில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, ஜிந்துப்பிட்டியை சூழவுள்ள பாடசாலைகளின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதியை சூழ மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வைத்தியசாலைகள் அமைந்துள்ளதால், இது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தநிலையில் அந்தப் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி ஜிந்துப்பிட்டியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பதிவானதை அடுத்து, 31 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜிந்துப்பிட்டி 129 ஆம் தோட்டப் பகுதி தற்போது மக்கள் நடமாட்டமற்ற இடமாக மாறியுள்ளதுடன், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கொட்டாஞ்சேனை – ஜிந்துப்பிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து. கடந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 154 பேரில்இ 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வந்த நிலையில், கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட ஜிந்துப்பிட்டியை சேர்ந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேரும், கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட 50 பேரில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435