பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் குதிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு நிர்வாக அதிகாரிகள் சங்கமும் இணைந்துகொண்டுள்ளது. இன்றும் (22) நாளையும் 23 அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் 26ம் திகதியுடன் தன்னார்வரீதியில் தாம் மேற்கொண்ட அனைத்து சேவைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் அவர்களுடைய கோரிக்கைகள் தமக்கும் உரியது என்பதனால் அவர்களுக்கு ஆதரவளிக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தயால் அபயசிங்க எமது சகோதர மொழி இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தவிர பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கே உரிய பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடர்பில் கலந்துரையாட கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் பல்கலைக்கழக ஆணைக்குழுவிடம் உரையாடியபோதும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி நேரம் ஒதுக்கியிருந்தது. எனினும் யார் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது தொடர்பிலும் தமது கோரிக்கையை எழுத்து மூலமாக கையளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களை கோரிக்கை நிறைவேற்றப்பட்ட போதிலும் கலந்துரையாடலுக்கு சில தினங்கள் இருக்கையில் பிற்போடப்பட்டது. எனினும் கலந்துரையாடுவதற்கான மறு சந்தர்ப்பம் இன்று வரையில் வழங்கப்படவில்லை.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிர்வாக அதிகாரிகளின் சேவையை நிரந்தரமாக்கிக்கொள்வதற்கான செயற்பாடொன்றை மேற்கொள்வது அவசியம். எனினும் இதுவரை அவ்வாறான ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குறித்த ஆண்டுக்குப் பின்னர் சேவையில் இணைந்துகொண்டவர்களுக்கான சம்பள உயர்வு, இடமாற்றம் பெறல் உட்பட பல சலுவைகள் இன்னமும் கிடைக்கவில்லை.

2மறுபுறம் 2016/4 சுற்றுநிரூபத்தினூடாக கீழ் மட்ட சேவையாளர்கள் முதல் சிரேஷ்ட பேராசிரியர்கள் வரை சம்பள தரங்களும் குறைக்கப்பட்டுள்ளன. ஏனைய அரச ஊழியர்கள் போன்று ஓய்வூதியம் இன்றி வெறும் பங்களிப்பு ஓய்வூதியம் மட்டுமே தமக்கு கிடைக்கும் நிலையில் அடிப்படையில் சம்பள தரம் குறைக்கப்பட்டால் பங்களிப்பு வீதம் குறைந்து தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வாகன வரிவிலக்கு சுற்றுநிரூபம் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட கடந்த 10-15 வருடங்களாக பணியாற்றி அனுபவம் உள்ளவர்களுக்கும் அச்சலுகை இல்லாம் போகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ம் திகதிக்கப் பின்னர் தன்னார்வரீதியாக தாம் மேற்கொண்ட சேவைகளில் இருந்த விலகிக்கொள்வதாக கடந்த 19ம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்ட பின்னர் அதன் தலைவருடைய கையெழுத்துடன் மார்ச் மாதம் 20ம் திகதி அனைத்து உபவேந்தர்களுக்கும் உடடியாக செயற்படும் வகையில் சம்பளம் மற்றும் சம்பள கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தோம்.

பல்கலைக்கழக ஆணைக்குழுவினூடாக வழங்கப்படும் நிதியினூடாகவே பல்கலைக்கழக சம்பளம வழங்கப்படுவதனால் மார்ச் மாதம் 20ம் திகதி அப்பணம் பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்கப்பெறாமையினால் அவ்வாறான ஒரு கடிதம் அனுப்பப்பட்டமை சிரிப்புக்குரிய விடயம். அவர்கள் கலந்துரையாடலுக்கான வாய்ப்பை வழங்கியிருந்தார்களாயின் பிரச்சினை இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435