பரீட்சையில் சித்தியடைந்தும் நியமனம் பெறாத மேல்மாகாண பட்டதாரிகள்

மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் 4097 பேர் சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில் 400 இற்கும் குறைந்த எண்ணிக்கையானவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 2 வருடங்கள் ஆகின்றன. எனினும் சித்தியடைந்த ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நிதியமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் இதுவரை அனுமதியளிக்கவில்லை. குறித்த பரீட்சையில் சித்தியடைந்த சுமார் சுமார் 3600 பேர் இதுவரை நியமனம் கிடைக்காது வீடுகளில் உள்ளனர். இது தொடர்பில் நேற்று (27) நிதியமைச்சிடம் மனு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435