பண மோசடி செய்த நபருக்கு உயர் பதவி- இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்

பண மோசடி செய்த நபரை மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டாம் என இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுபது மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த நிலையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நபர் ஒருவரை மீளவும் பணிக்கு அமர்த்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நபரை மீளவும் பணிக்கு இணைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் குறித்த சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்கவின் கையெழுத்துடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் லங்காப்புத்ர அபிவிருத்தி வங்கியில் (தற்போதைய பிரதேச அபிவிருத்தி வங்கி) 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டு இடைநிறுத்தப்பட்ட ‘வென்னப்புவ கிளை முகாமையாளர் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர், கிளை கணக்காய்வாளர் ஆர்.எம். உதாய் முதித்த ரணதுங்க (சேவை இலக்கம் 063) என்பவர் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் உட்பட பணிப்பாளர் குழுவின் திட்டமிடலுக்கு அமைவாக மீண்டும் 15.07,2020ம் ஆண்டு தொடக்கம் சேவையில் ஈடுபடுத்த எடுக்கப்படும் முயற்சிகளை நிறுத்துமாறு கோருகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை நேரடியாக வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்குமாறும் அக்கடித்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435