பணியில் இணையும் வயதெல்லைச் சட்டத்தில் விரைவில் மாற்றம்?

​சேவையில் இணைப்பதற்கான வயதெல்லை சட்டத்தை நீக்குவதுடன் அச்சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக பெண்களும் உழைக்கும் வர்க்கத்துடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கான இரண்டாம் நாள் விவாதம் 11ம் திகதி நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சேவையில் இணைவதற்கு வயது முக்கியமல்ல, திறமையும் ஒழுக்கமுமே அவசியம். எனவே சேவையில் இணைவதற்கான வயதெல்லை விதித்தல் நீக்கப்படும்.

இவ்வாறு சட்டம் நீக்கப்படுவதனூடாக தொழில் செய்யும் தகுதியுள்ள பெண்களும் உழைக்கும் வர்க்கத்துடன் இணைந்துகொள்ள முடியும். இந்நாட்டில் உயர்கல்வியை கற்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்றபோதிலும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குடும்ப பொறுப்பில் பெறும் பகுதி பெண்களால் வகிக்கப்படுகின்றமை, பிள்ளைகளை பராமரித்தல் போன்ற காரணங்களினால் மாற்றுவழியின்றி பெண்கள் தொழில் செய்வதில் இருந்து விலகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதற்கான மாற்றுவழியை நாம் தேடவேண்டியது அவசியம்.

கடந்த 2006ம் ஆண்டு உழைக்கும் வர்க்கததில் 6 வீதம் பெண்கள். ஆனால் இன்று அது 36 வீதத்தால் அதிகரித்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அவசியமான சட்டத்தை நாம் கடந்த வருடம் அமுல்படுத்தினோம். தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை பெற்று கொடுத்தோம். கர்ப்பகால விடுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 84 நாட்கள் விடுமுறையை தாய்க்கு வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். அவர்களை சேவையில் இணைப்பதற்கு தனியார் துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு செலவு அதிகம் என்கின்றனர். அதனால் பிரசவ விடுமுறையில் ஒரு பகுதியை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கே இத்தீர்மானம் எட்டப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435