பணப்பரிமாற்றத்திற்கான செலவீனம் UAE யில் அதிகரிப்பு- உலக வங்கி

ஐக்கிய அரபு இராச்சித்தில் பணியாற்றும் வௌிநாட்டுப் பணியாளர்கள் தமது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவு அண்மைக்காலமாக அதிகரித்துள்ள உலக வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் 200 அமெ. டொலரை பரிமாற்றம் செய்வதற்கான அறவீட்டுத் தொகையே 9.75 வீதமாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் எகிப்து உட்பட 7 நாடுகளுக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான தொகை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மேற்கொள்கின்ற பணப்பரிமாற்றம் மற்றும் பணமாற்றம் என்பவற்றுக்கான அறவீட்டுத் தொகையே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வலைக்குடா நாடுகளுக்கு வௌியே உள்ள பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அந்நிய செலாவணியே காணப்படுகிறது. வலைக்குடா நாடுகளில் பணியாற்றும் பல வௌிநாட்டு பணியாளர்கள் தமது இருப்பிடம், உணவு, கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் அதேவேளை, சேமிப்பு, முதலீடு, அவசரதேவை மற்றும் ஓய்வூதிய தொகை என்பவற்றுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

பணப்பரிமாற்ற செலவீனத்தை குறைப்பது தொடர்பான உலக பிரசாரத்தின் விளைவாக, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த வௌிநாட்டுப் பணியாளர்களின் பணப்பரிமாற்றம் தொடர்பில் உலக வங்கி உன்னிப்பாக அவதானித்து வருகின்றமையினால் இவ்விடயம் அடையாளங்காணப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435