பட்டதாரிகள் 50000 பேருக்கு நேர்முகத்தேர்வு; 5100 பேருக்கு மட்டுமே நியமனம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக கூறி 50,000 பேரை நேர்முகத்தேர்விற்கு வரவழைத்து வெறும் 5100 பட்டதாரிகளுக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நேற்று (06) பாராளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இலவசக்கல்விக்கும் அதே வயதுதான். எனினும் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்று புத்திஜீவிகளாக பார்க்கப்படுபவர்கள் தொழில் வாய்ப்பின்றி துன்பப்படுகின்றனர். வரலாற்றில் அதிக எண்ணிக்கையான பட்டதாரிகள் தொழிலின்றி இருக்கின்றனர். சுமார் 57,000 பட்டதாரிகள் தொழிலின்றி உள்ளனர். அவர்களில் உயர் வகுப்பில் சித்தியடைந்தவர்களும் இருந்தனர்.

பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் தொடர்பில் தேர்தல் மேடைகளில் முழங்குகின்றனர். அதேநேரம் ஆயிரக்கணக்கான புத்திஜீவி இளைஞர் யுவதிகள் தொழிலின்றி உள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு அன்றைய அரசு 48,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. அதனை உதாரணமாக கொண்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்க இன்றைய அரச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்- திவயின
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435