பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளில் ஆசிரியர் நியமனம் எவ்வளவு தெரியுமா?

சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உள்வாரி-வெளிவாரி பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435