பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக மேல் மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்றுஆளுநர் அலுவலகம் செய்தி வௌியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த 8ம் திகதி வர்த்தமானியில் மேலதிக விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளும் புதிய ஆசிரியர் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் கணக்கெடுப்பின் படி மேல் மாகாண பாடசாலைகளில் சுமார் 200 ஆசிரியர் வெற்றிடங்கள் மட்டுமே காணப்படுவதாகவும் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் திறமையான ஆசிரியர் இன்மை காரணமாக எதிர்பார்க்கும் அளவு சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதில்லை என்றும் அனைத்து பாடசாலைகளிலும் கல்வியை மேம்படுத்துவதென காலியில் நடைபெற்ற ஆளுநர் ஒன்றுகூடலில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435