படுகொலை வரலாற்றை பதிய தயாராகிறதா சம்சுங்?

சம்சுங் நிறுவனத்தின் வியட்னாம் நாட்டின் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுடைய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த தவறியுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வியட்னாம் தலைநகர் ஹனோயை தளமாக கொண்டுள்ள பால்நிலை, குடும்பம் மற்றும் சுற்றாடல் அபவிருத்திக்கான ஆய்வு மத்திய நிலையம் ( Research Centre for Gender, Family and Environment in Development – CGFED) இக்குற்றச்சாட்டை அண்மையில் முன்வைத்துள்ளது.

தென்கொரியாவில் இலத்திரனியல் பொருட்களை தயாரிப்பதற்கான செலவு ஒப்பீட்டு ரீதியில் வியட்நாமில் குறைவு என்பதனால் அந்நாட்டிலும் உற்பத்தி தொழிற்சாலைகளை சம்சுங் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ஸ்மார்ட் போன் பாகங்களை இணைக்கும் தொழிற்சாலைகளில் அத்தொழிற்சாலைகளில் நச்சுத் தன்மை அதிகமாக வௌியேறுவதனால் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் கருச்சிதைவுக்குள்ளாவதுடன் கருத்தரிக்காமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அவ்வாய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சம்சங் நிறுவனமானது தொழிலாளர்கள் மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை தனது பணியிடங்களில் பின்பற்றாது போனால் படுகொலை வரலாற்றை பதியவேண்டிய அபாயம் உள்ளதாக அவ்வாய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435