பங்களாதேஷில் தீ விபத்து: இலங்கையர் ஒருவர் உட்பட 19பேர் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 70 பேர் காயமடைந்துள்ளனர்.

டாக்காவின் பனானியில் உள்ள 22 தளங்களைக்கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று இந்தத் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், 19 பேர் இந்த தீ விபத்தில் பலியாகினர்.

இந்த விபத்திலிருந்து தப்பிப்பதற்காக அடுக்குமாடி கட்டடத்திலிருந்து கீழே குதித்த நிட்டம்புவயைச் சேர்ந்த நிரோஸ் விக்னராஜா என்ற இலங்கையர் பலியாகியுள்ளார்.

அத்துடன், மற்றுமொரு இலங்கையர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435