நேற்று 14 பேருக்கு கொரோனா: 12 பேர் நாடுதிரும்பியவர்கள்

நாட்டில் நேற்று 14 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.

கந்தக்காடு முகாம் கைதி ஒருவருக்கும், குவைத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து நாடுதிரும்பியிருந்த 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த இருவருக்கும், இலங்கை வந்துள்ள இந்திய பிரஜை ஒருவருக்குமே கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 18 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,118 ஆக அதிகரித்துள்ளது.

182 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடாந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435