நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

தர்மாசார்ய பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான நேர்முக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கல்வியமைச்சு இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் மத விடயதானங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தர்மாசார்ய பரீட்சையில் சித்திபெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-II வகுப்புக்கு இணைத்துக்கொள்வதற்காக 2020-02-24 முதல் 2020-03-02 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட நேர்முக பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நேர்முக பரீட்சை நடத்தப்படும் திகதி பிறகு அறிவிக்கப்படும்.

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435