பொலிஸ் திணைக்களத்தின்கீழ் 250ரூபா வேதனம்: ரயில் கடவை ஊழியர்கள் போராட்டம்

நாளொன்றுக்கு 250 ரூபா வேதனத்துடன் தொழிலில் ஈடுபட்டுவரும் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பற்ற தொடருந்து குறுக்கு வீதிகளில் கடமையாற்றும் ஊழியர்கள், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உள்ள தங்களது சேவையை, தொடருந்து திணைக்களத்தின் கீழ் நிரந்தரமாக்குமாறு கோரி, நேற்று நள்ளிரவு முதல் அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கை சேர்ந்த சுமார் 400 பணியார்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம், இன்றைய தினம் அவர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நாள் ஒன்றுக்கு 250 ரூபா வேதனத்தில் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் தாங்கள் பணியாற்றுவதாவும், இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு திட்டத்தில் தங்களை நிரந்த நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி தாங்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435