நாடு முழுவதும் 1660 கிராம சேவகர் வெற்றிடங்கள்

நாடு முழுவதிலும் உள்ள 1660 கிராம சேவகர் வெற்றிடங்களின் காரணமாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கடமைகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதாக கிராமசேவகர் சங்கம் தெரிவித்துள்ளது.

332 நிருவாக கிராம சேவகர் பதவிகளில் 130 வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று கிராம சேவகர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளன.

இது தவிர நாட்டில் கிராம சேவகர் பதவிகள் 14,022 உள்ளன. அப்பதவிகளில் 1232 பதவிகள் காலியாகவே உள்ளன. வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு கடமைகளை கிராம சேவகர்களுக்கு வழங்கியுள்ள நிலையில் அவை குறித்து ஆராய்ந்து ஏனையோருக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்குவது நிர்வாக கிராம சேவகர் அதிகாரிகளின் கடமையாகும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தேர்தல் விசாரணைகளை மேற்கொள்வது உட்பட பாரிய பொறுப்புக்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வெற்றிடங்களை கடந்த 20ம் திகதி பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதிலும் அது செயற்படுத்தப்படாமல் போய்விட்டது என்றும் கிராமசேவகர் சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435