தொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்

கட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது.

இருநாடுகளுக்கிடையில் தொழில்வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கட்டார் வர்த்தக சபையின் முதலாவது துணைத்தலைவர் மொகமர் பின் ரவர் அல்குவாறி (Mohamed bin Towar al-Kuwari) மற்றும் இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியத்தின் செயலாளர் யமுனா பெரேரா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் தொடர்பில் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து கட்டார் வர்த்தக சபை அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து தகுதியான பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை வரவேற்பதாக துணைத்தலைவர் மொகமர் பின் ரவர் அல்குவாறி தெரிவித்துள்ளார்.

இதில் கலந்துகொண்ட கட்டார் வர்த்தக சபை அதிகாரிகள் தென்கிழக்காசிய நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தமது நாடு உதவுவதாக தெரிவித்தனர். கட்டார் நாட்டின் பொருளாதாரத்திற்கு இலங்கை பணியாளர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பையும் இதன்போது துணைத்தலைவர் பாராட்டினார்.

கட்டார் சபையினர் வர்த்தக நிறுவனங்களில் இலங்கை பணியாளர்களை மேலும் தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் சபை ஊக்குவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டடநிர்மாணம், சேவைகள், சுகாதரத்துறை உள்ளிட்ட பல பிரிவுகளில் பணியாற்றக்கூடிய தகுதிவாய்ந்த பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்களை கட்டாருக்கு அனுப்புவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாக யமுனா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435