தொழிலுரிமைக்காக போராடுகிறோம் – புரிந்துக்கொள்ளுங்கள்

எங்களனைவருக்கும் நிரந்தர அரச நியமனம் கிடைக்க வேண்டும் என்றே நாம் போராடி வருகிறோம். இதனை

விமர்சிப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வடக்கு மாகாணசபையில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டம் தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பட்டதாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

வடக்கு பட்டதாரிகள் வடக்கு மாகாண சபை முன்பாக போராட்டததை ஆரம்பித்து நேற்றுடன் 75வது நாட்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இதுவரை எவ்விட தீர்வும் எட்டப்படவில்லை.

எமது தொழிலுரிமைக்காக நாம் போராடுகிறோம், இதனை விமர்சிப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 17ம் திகதி வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையினூடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று பட்டதாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435