தொழில் சங்க, சிவில் சமூக அமைப்புக்களின் மே தின முன்மொழிவுகள்!

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் 2 ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ‘பொதுச்சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்தியநிலையம்’ ஏற்பாடு செய்த மே தின கூட்டம் இம்முறை கொள்ளுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள CMU மண்டபத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சிவில் சமூக செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் ஊடாக தொழிலாளருக்கு எதிரான சட்டம் மற்றும் பொருளாதாரத்தை பின்னடையக்கூடிய சூழ்நிலையில் மே தினம் கொண்டாடப்படுகிறது.

மே முதாம் திகதி நடாத்தப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வில், கீழே தரப்பட்டுள்ள முன்மொழிவுகளை நிறைவேற்ற ‘பொது சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலைய’த்தில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் 24 இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மே தினத்தில் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவுகள் வருமாறு,

1. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) உடனடியாக நிறுத்துக

2.தொழிலாளரை பாதுகாக்கும் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை பலப்படுத்துக
3. அத்தியவசிய பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் நீக்குக.

அத்தியவசிய பொருட்களின் விலையை குறைக்குக,

சர்வதேச கடன் முகவரின் மோசமான கடன் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ள அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலை சூத்திரத்தை உடனடியாக ரத்து செய்க.

4. வாழ்க்கைக் கொடுப்பனவானது சந்தை விலைக்கு பொருந்தும் வகையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமான வகையில் வழங்கல் வேண்டும்.

5. அனைத்து வகையிலும் சமய தீவிரவாதிகளை தோற்கடிப்போம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சிவில் ஆட்சியை நடைமுறைப்படுத்தல்.

6. 2016ம் ஆண்டு தொடக்கம் அரச துறைக்கு இல்லாமலாக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கான நிதியத்தை ஸ்தாபித்தல்.

EPF, ETF நிதியங்களில் கை வைக்காமல் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியத்தை ஆரம்பித்தல்

தற்போது சுதந்திரமாக நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதிய முன்மொழிவில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நீக்குக.

8. சேவையாளர் நலன்புரி நன்மைகளுக்கு வரி அறவிடுவதை உடனடியாக நிறுத்துக.

9. கிராமிய பொருளாதாரத்தை நாசமாக்கும் நுண்கடனை உடனடியாக ரத்து செய்க.

10. ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பங்குச் சந்தையில் முன்னிலைப்படுத்தி முதலீடு செய்வதை உடனடியாக நிறுத்துக.

இதுவரை முதலீடு செய்யப்பட்டதனூடாக ஏற்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டம் தொடர்பில் சுயாதீன விசாரணையை ஆரம்பித்தல்.

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு அறவிடப்படும் அனைத்து வரியை உடனடியாக நிறுத்துதல்.

11. சர்வதேச வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னர் தேசிய வர்த்தக கொள்கையை ஸ்தாபித்தல்

12. ஆசிரியர், தபால். புகையிரதம், பெருந்தோட்ட சபை சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்தல்

13. கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்குதல்.

சுதந்திர கல்வி உரிமையை உறுதிச் செய்க

14. 8 மணி நேர வேலையை உறுதிச் செய்தல்

15. கூட்டுப் பேரம் பேசும் உரிமையை உறுதிச் செய்க.
ஒன்று கூடும் உரிமையை உறுதிச் செய்க
16. மேன் பவர் அடிமை முறையை ரத்து செய்வதற்கான சட்டத்தை ஸ்தாபிக்குக.

17. மகப்பேற்றுக்கான ஓய்வை 180 நாளாக அதிகரிக்குக.
மகப்பேற்று காலத்தில் தந்தைக்கான ஓய்வை 7 நாளாக அதிகரித்தல்.

18. தொழிற்றுறையில் பெண்களுக்கு பாதுகாப்பான விரும்பத்தக்க சூழலை உருவாக்குவதற்கான சட்டத்தை உருவாக்குதல்

19. தொழிற்றுறையில் தமிழ் ஊழியர்களுக்கு காட்டும் மாற்றாந்தாய் தன்மையை மாற்றுக!

20. சட்ட திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக செயற்படுத்துதல்.

21. உண்மையான தேசிய கண்ணியமான வேலையை உறுதி செய்தல்
பொய்யான கண்ணியமான வேலை முறையை இல்லாதொழிக்குக

22. அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் மோசமான சூழலை மாசை உடனடியாக நிறுத்துக.

23. விவசாயிக்கான காணி, விதை மற்றும் உரிமைகளை தனியார் மயப்படுத்துவதை உடனடியாக நிறுத்துக.

22. வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வாக பேண்தகு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல்

25. சிறு மீன் பிடி மீனவர்களை பாதுகாப்பதற்கான தேசிய மீனவ கொள்கையை ஸ்தாபித்தல்.

26. தோட்டத் தொழிலாளர்களின் ஒரு சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்தல்

27. தனியார் துறையில் பணியாற்றுவோரின் மாதாந்த அடிப்படை சம்பளத்தை 26000 ரூபாவாக அதிகரித்தல்.

28. சேவை பூர்த்திக்கான சட்டத்தில் அதி கூடிய நட்டஈட்டின் மட்டுப்படுத்தலை அகற்றுதல்

அந்நட்டஈட்டுக்கு வரி அறவிடுவதை உடனடியாக நிறுத்துக.

29. தொழிலாளர் நட்ட ஈட்டுக்கு வழங்கும் மட்டுப்படுத்தலை ரூபா 550,000 இலிருந்து 1,100,000 ரூபாவாக அதிகரித்தல்.

30. தேயிலை, தேங்காய், ரப்பர் மற்றும் வாசனைப் பொருள் பயிர்களுக்கு தரகர்களின் தலையீடின்றி நியாயமான நிரந்தர விலைச்சூத்திரத்தை உருவாக்குக.

கிழங்கு, வெங்காயம், உட்பட அனைத்து பொருட்களுக்கும் நிரந்தர விலை வழங்குதல்.

நெல்லுக்கான விலையை அதிகரிக்குக.

31. தனியார் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் 42 விடுமுறை நாட்களை வழங்குக.

32. அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும் 51 வீத அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வாளரின் ஆய்வுக்குட்படுத்தல்.

33. ஜனநாயக அரசாங்கத்துடன் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத மூக்குநுழைப்புகளை உடனடியாக நிறுத்துக.

33. ஊடகவியலாளர்கள் மீது தாக்கதல் நடத்திய அனைனவருக்கும் உடனடியாக தண்டனை வழங்குக.

மேற்கூறப்பட்ட முன்மொழிவுகளை பலப்படுத்தி, தொழிலாளர், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதனூடாக அனைத்து தொழிலாளரகள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கு எதிரான சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக 2019 சர்வதேச தொழிலாளர் தினத்தில் கோருகிறோம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435